Department of Housing – Central Province

மாகாண வீடமைப்புத் திணைக்களம்

மத்திய மாகாண சபை

சக்திப் பாதுகாப்பு, மாற்று எரிசக்தி மற்றும் வீடமைப்பு கட்டுமானங்கள் தொடர்பான கண்டுபிடிப்பாளர்கள் போட்டி - 2026

பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 2026-04-30

எங்களைப் பற்றி

1989 ஆம் ஆண்டு முதல் மத்திய மாகாண போக்குவரத்து, பெருந்தெருக்கள், கலாசார, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஒரு உப பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களமானது, 1994 ஆம் ஆண்டு முதல் பதில் வீடமைப்பு ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்ததோடு, 1999 ஆம் ஆண்டில் ஒரு தனித் திணைக்களமாகத் தாபிக்கப்பட்டது. இத்திணைக்களமானது 1993 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க மத்திய மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நியதிச்சட்டம் (இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி பத்திரிகை – 1994.07.01 IV (அ) பகுதி) மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் மாகாண சபைகள் பட்டியலின் இலக்கம் 5 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாகாணங்களின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை விடயதானத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகச் செயற்படுகின்றது. மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்தின் மூலமும் அதன் கீழ் இயங்கும் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா வாடகைச் சபைகள் மூலமும் 2002 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க மற்றும் 1980 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்கச் சட்டங்களினால் திருத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாடகைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

தூரநோக்கு

வீட்டு உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதனூடாகக் குடும்பங்களை வலுவூட்டி, மத்திய மாகாணத்தில் அபிமானமிக்க ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல்.

பணிக்கூற்று

எவரையும் தவறவிடாது அனைவருக்கும் நிலைபேறான மற்றும் கட்டுப்படியாகக்கூடிய வீடமைப்புத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நாம் முயற்சிக்கின்றோம். அதனூடாக சமூகத்தில் சமத்துவம் மற்றும் சம சந்தர்ப்பம் பற்றிய உணர்வை வளர்த்து, ஒவ்வொருவருக்கும் தமக்கே உரியது எனக் கூறக்கூடிய ஒரு வாழ்விடம் உள்ள சமூகமொன்றை உருவாக்குவதே எமது இலக்காகும். எமது அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளினூடாக தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் சுபீட்சத்தை வலுவூட்டுவோம். எதிர்கால சந்ததியினருக்காகப் பெருமையுடனும் பூரண உரிமையுடனும் கூடிய ஒரு சூழலை உருவாக்குவோம்.

நிறுவனத்தின் பிரதான தொழிற்பாடுகள்

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுத்தல்.

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டும் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

  • வினைத்திறனும் பயனுறுதிமிக்கதுமான நிறுவனக் கட்டமைப்பொன்றை ஸ்தாபித்தல்.

  • குடியிருப்பாளர்களின் வீட்டு உரிமை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

எம்மைத் தொடர்பு கொள்ள

  • தொலைபேசி

    081-2222 457

  • தொலைநகல்

    081-2222 457

  • மின்னஞ்சல்

    housingdept.cp@gmail.com

  • முகவரி

    இல. 109, யட்டிநுவர வீதி, கண்டி.

  • அலுவலக நேரம்

    திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை